திருமணமான இரண்டே மாதத்தில் புதுமணத் தம்பதியர் விபத்தில் பலி. சோகத்தை ஏற்படுத்திய சிதம்பரம் சம்பவம்.
திருமணமான இரண்டே மாதத்தில் புதுமணத் தம்பதியர் விபத்தில் பலி. சோகத்தை ஏற்படுத்திய சிதம்பரம் சம்பவம்.
சிதம்பரம் அருகே சித்தாலபாடி பகுதியில் குமராட்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளவரசியும் அவரது கணவர் கலைவேந்தனும்
இன்று (ஜன. 5) ஒன்றாக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
இந்த நிலையில், அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்து தம்பதியரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இவர்கள் இருவருக்கும் இரண்டு மாதங்கள் முன்னர்தான் திருமணம் நடைபெற்ற நிலையில், தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த அண்ணாமலை நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.