கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவல் – கட்டுப்பாட்டு அறை திறப்பு.

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவல் – கட்டுப்பாட்டு அறை திறப்பு.

மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. புனே தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்தச் சிறுவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவர்களின் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, அந்த மாணவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். அப்பகுதி மக்களையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், யாரும் பயப்பட தேவையில்லை. தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களை போலீசார் உதவியுடன் தேடி வருகிறோம் என்றார்.
இதனிடையே, கோழிக்கோட்டில் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட 3 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்