ஆம்னி பேருந்து ஓட்டுநர் சித்ரவதை. உரிமையாளர் மீது போலிஸார் நடவடிக்கை.
ஆம்னி பேருந்து ஓட்டுநர் சித்ரவதை. உரிமையாளர் மீது போலிஸார் நடவடிக்கை.
ஆம்னி பேருந்து நிறுவனத்துக்குத் தெரியாமல் பயணிகளை ஏற்றிச் சென்று பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விஷயம் ஆம்னி பஸ் உரிமையாளருக்கு தெரிய வந்ததையடுத்து, மதுரை ஆம்னி பஸ் அலுவலகத்தில் டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
டிரைவரின் கைகளை ஜன்னல் கம்பிகளால் பின்னால் கட்டி நீண்ட நேரம் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கைகளில் வலி ஏற்பட்டதால், கதறி அழுத டிரைவரை, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கைகளை அவிழ்க்க விடவில்லை. இந்த தாக்குதலின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து மனித உரிமை ஆணையமும், தமிழக காவல்துறையும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஆம்னி பஸ் உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.