இலுப்பூர் பேரூர் கழகம் சார்பில் கழக செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இலுப்பூர் ARR மஹாலில் நடைபெற்றது.

 

புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் அன்னவாசல் மேற்கு ஒன்றியம், மற்றும் இலுப்பூர் பேரூர் கழகம் சார்பில் கழக செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இலுப்பூர் ARR மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமை தாங்கினார்.சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பேசுகையில்

மிகுந்த சீரோடும், சிறப்போடும் நமது செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெறுகிறது.
பார் சிறுத்ததால் படை பெருத்ததோ? படை பெருத்ததால் பார் சிறுத்ததோ என்று கூறுவார்கள். அண்ணா தி.மு.க படையால் இலுப்பூர் சிறுத்ததோ, இலுப்பூர் சிறுத்ததால் அண்ணா திமுக பெருத்ததோ என்று கேள்வி கேட்டால், இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வலுவோடு பெருத்ததால் இலுப்பூர் சிறுத்தது என்று சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலுப்பூர் மேலப்பட்டியில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் வரவேற்பில் தொடங்கி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து, எம்ஜிஆர் மன்றம், இளைஞரணி, அம்மா பேரவை, மாணவரணி புல்லட் ஊர்வலம், மகளிரணி ஸ்கூட்டி ஊர்வலம், ஓட்டுநரணி, கலைப்பிரிவு என அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து கும்மியடித்து நடனமாடி புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழ் பாடி , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வலுவோடு நடத்திக் கொண்டிருக்கின்ற அண்ணன் எடப்பாடியார் அவர்களை 2026ல் முதலமைச்சராக வர வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு பெரிய கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது.

தேர்தலுக்கு இன்னும்
ஒன்றேகால் ஆண்டுகள் இருந்தாலும் கூட அடுத்த தீபாவளி முடிந்து அதற்கு அடுத்த தீபாவளி அண்ணா திமுக ஆளுங்கட்சியாக கொண்டாடும்.

நான்கு ஆண்டுகளாக திமுக ஆட்சி பொறுப்பேற்று இலுப்பூருக்கும் அன்னவாசலுக்கும், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் இதுவரை செய்யவில்லை.

காவேரி வைகை குண்டாறு திட்டம் 14000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்டு இன்றைக்கு திமுக அரசால் முடக்கப்பட்டு உள்ளது.

நமது ஆட்சியில் கொடுக்கப்பட்ட 700 கோடி ரூபாயை தவிர திமுக ஆட்சியில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை.

மின்சார கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது, ஏழை பெண்ணிற்கு தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுதான் தற்போதைய ஆட்சியின் நிலைமை.

ஆக இந்த ஆட்சியால் விவசாயிகளுக்கும் பயனில்லை, வணிகம் செய்யக்கூடிய வியாபாரிகளுக்கும் பயனில்லை, தொழில் செய்யக் கூடியவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என யாருக்கும் பயனில்லை.

அன்னவாசல் மேற்கு,இலுப்பூர் பேரூர் கழகங்களின் செயல் வீரர்கள் கூட்டம் , ஒன்றிய மாநாடு போன்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த எழுச்சியை பார்க்கையில் விடியா திமுக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

வீட்டு வரி, தண்ணீர் வரி என அனைத்து வரிகளும் உயர்வு, தங்கம் விலை உயர்வு, இன்னும் ஆறு மாதத்தில் தங்கம் விலை ஒரு லட்சத்தை கடக்கும், இந்த ஆட்சியில் தாலிக்கு தங்கமும் இல்லை, தாளிக்க தக்காளியும் இல்லை.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் நமக்கான ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல.
நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் தான் நமக்கான தேர்தல்.

மக்களை வாட்டி வதைக்கின்ற உதய சூரியனா? அல்லது
துளிர்கின்ற இரட்டை இலையா? களத்தில் சந்திப்போம்..

விராலிமலை முருகன் மீது ஆணையாக கூறுகிறேன், எழுதி வைத்து கொள்ளுங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு தொகுதியும் அதிமுக வெல்லும்.
2026 இல் எடப்படியார் முதலமைச்சர் அரியணையில் ஏறுவார்.

இன்றைக்கு கூட்டம் முடிந்தவுடன் டீ கடைக்கு சென்று பத்து பேருக்கு டீ வாங்கி கொடுத்து டீயை ஆத்தும் பொழுது, திமுக ஆட்சியின் அவலத்தை பற்றியும் இரண்டு ஆத்து ஆத்துங்க, மக்களுக்கு உண்மையை கொண்டு செல்லுங்கள்,அன்போடு பழகுங்கள். எங்கு சென்றாலும் காலரை தூக்கி விட்டு தெம்பாக கூறுங்கள் நான் அண்ணாதிமுககாரன் என்று. அண்ணா திமுக என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல, நெருப்பாற்றிலே நீந்தி வந்த இயக்கம். இது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட, புரட்சி தலைவி அம்மா அவர்களால் வளர்தெடுக்கபட்ட இயக்கம்.

எம்ஜிஆரின் படத்தை பார்த்து, எம்ஜிஆரின் முகத்தை பார்த்து,அவருடைய பாடல் வரிகளை கேட்டு, இன்றைக்கும் புரட்சி தலைவரின் புகைப்படத்தை வீட்டில் மாட்டி வைத்து வணங்கும் தொண்டர்களை கொண்ட இயக்கம் அண்ணா திமுக.

வேட்பு மனுதாக்கலுக்கு நேரிலே செல்லாமல் , பிரச்சாரத்திற்கு போகாமல், வீடு வீடாக சென்று வாக்கு கேட்காமல், தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டாமல், எந்தவித பிரச்சாரம் இல்லாமல், அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே பரங்கிமலை தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே தலைவனை கொண்ட இயக்கம் நமது அண்ணா திமுக இயக்கம்.
மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு இது சாத்தியமா??

நீங்கள் கடைக்கு சென்று இரண்டு பச்சை பேனா வாங்கி கொள்ளுங்கள்,
2026 இல் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு ஒன்றை எனக்கு கொடுங்கள், மற்றொன்று உங்களுக்கு,
நான் சட்டமன்ற உறுப்பினராக பச்சை பேனாவில் கையெழுத்து போடும் பொழுது,நீங்களும் கூட்டுறவு சங்க தலைவராக, இயக்குநராக, ஊராட்சி மன்ற தலைவர்,பெருந்தலைவர், ஒன்றிய கவுன்சிலர்,மாவட்ட கவுன்சிலர்,வார்டு உறுப்பினர் என மக்கள் பிரதிநிதியாக பச்சை பேனாவில் கையெழுத்து போடுவீர்கள்.

அதோடு அல்லாமல் நான்கு வேஷ்டி,சட்டை சலவை செய்து வைத்து கொள்ளுங்கள்,2026 இல் பதவியேற்பு விழாவிற்கு நாம் தலைமை செயலகத்திற்கு செல்ல வேண்டும்.

லேப்டாப்,தாலிக்கு தங்கம், திருமணத்திற்கு ஐம்பதாயிரம், முதியோர் உதவித்தொகை வழங்கிய ,கொரோனா காலத்தில் 2500 ரூபாய் வழங்கியவர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்,
எழுதி வைத்து கொள்ளுங்கள்
அண்ணா திமுக ஆட்சி மீண்டும் மலரும்.

மழை எப்போது வேண்டுமானாலும் வரும், சூரியன் பளீரென்று தெரியும், திடீரென்று மேகம் சூழ்ந்து சூரியனை மறைத்து, மழை பெய்து வெள்ளத்தில் அடித்து செல்வது போல திமுக ஆட்சி அடித்து செல்லப்படும்.
கஜா புயல், கொரோனா கஷ்டம் , இன்ப துன்பம் என மக்களின் அனைத்திலும் உடன் நிற்பது அண்ணா திமுக மட்டுமே என்று கூறினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கழக செய்தி தொடர்பாளரும்,கழக வழக்கறிஞர் அணி துணை செயலாளருமான சசிரேகா அவர்கள் பேசுகையில்,.

முக ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதை செய்வோம் இதை செய்வோம் என்று கலர் கலராக வடை சுட்டு, எல்லா ஊருக்கும் சென்று பொய்களை அள்ளி தெளித்தார்.

ஆனால் இன்றைக்கு மக்கள் எல்லாம் என்ன கூறுகிறார்கள் என்றால் ஸ்டாலின் தான் வந்தாரு நீச்சல் அடிக்க விட்டாரு, நமக்கு நாமே,மக்களுக்கு நாமமே என்பதுதான் எப்பொழுதுமே திமுகவின் பாணி..

எனவே நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் தாலிக்கு தங்கம் திட்டம், லேப்டாப் ஸ்கூட்டி கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, முதியோர் உதவித்தொகை என எந்த பணமும் மக்களுக்கு வரவில்லை.
அண்ணா திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எந்த திட்டங்களும் தற்பொழுது நடைமுறையில் இல்லை.

மின் கட்டணம் ,சொத்து வரி, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு என அனைத்தையும் மனதில் கொண்டு வரப் போகின்ற தேர்தலில்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதோடு மட்டுமல்லாமல்,தமிழகம் முழுவதும்
இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து,இழந்த உரிமைகளை மீண்டும் பெற கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களை
2026 இல் முதலமைச்சர் அரியணையில் ஏற்றுவோம் என உறுதி எடுத்து களம் காண்போம் என்று கூறினார்.

கூட்டத்தினை ஒன்றிய கழக செயலாளர் பரம்பூர் சுப்பையா, நகர செயலாளர் சத்யா மணிகண்டன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சின்னதம்பி, மாவட்ட அணி செயலாளர்கள் அன்னலட்சுமி ஆறுமுகம், முஹமது இப்ராஹிம், ரஞ்சித்குமார் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், நார்த்தாமலை ஆறுமுகம்,மாநில நிர்வாகிகள் தமிழரசன், பாறை சிவா, மாவட்ட துணை செயலாளர் கருப்பையா,பேரூராட்சி முன்னாள் தலைவர் குருபாபு, நகர செயலாளர் பாஸ்கர், மாவட்ட,ஒன்றிய செயலாளர்கள் முத்தமிழ்,நாகராஜ்,ராஜ்குமார்,அண்ணாதுரை மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பழனிவேல், ராப்பூசல் பழனி,அண்ணாதுரை, முருகேசன்,வீரமணி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்