சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, காவேரி மருத்துவமனை சார்பில் திருச்சியில் சிறப்பு பட்டிமன்றம். மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பங்கேற்பு.
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, காவேரி மருத்துவமனை சார்பில் திருச்சியில் சிறப்பு பட்டிமன்றம்.
மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பங்கேற்பு.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கூற்றுப்படி, தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஐம்பத்தொன்று கடுமையான விபத்துக்கள் மற்றும் பதினாறு இறப்புகள் ஏற்படுகின்றன. 12.5 சதவீத விபத்துகள் மற்றும் கிட்டத்தட்ட 10 சதவீத இறப்புகள் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்கின்றன, அதாவது கிட்டத்தட்ட 90 சதவீத விபத்துகள் மற்றும் இறப்புகள் நமது நகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள நகர்ப்புற, துணை நகர்ப்புற சாலைகளில் நிகழ்கின்றன.
சாலைப் பாதுகாப்புச் செய்தியை எடுத்துரைக்கும் வகையில்,
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு திருச்சி காவேரி மருத்துவமனை மற்றும் மூளை தண்டுவட சிகிச்சை மையம் சார்பில் சாலை விபத்துகளுக்கு பெரிதும் காரணம் மக்களின் அறியாமையே? அலட்சியமே?என்ற தலைப்பில் தமிழ் இலக்கிய பட்டிமன்றம் பேராசிரியர் கலைமாமணி கு.ஞானசம்பந்தன் தலைமையில் திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் நடந்தது.
இந்த பட்டிமன்றத்தில் அறியாமையே என்ற தலைப்பில் பேராசிரியை கல்பனா தர்மேந்திரா,பேராசிரியர் சிதம்பரம் ஆகியோரும், அலட்சியமே என்ற தலைப்பில் பேராசிரியை மனோன்மணி, பேராசிரியை இந்திரா விஜயலட்சுமி ஆகியோரும் கருத்துக்களை எடுத்துரைத்தனர். முன்னதாக நடந்த நிகழ்வில் சாலை பாதுகாப்பு வாரத்தை ஒட்டி நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் காமினி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.
காவேரி மூளை மற்றும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை பிரிவுத் தலைவர் டாக்டர் ஜோஸ் ஜாஸ்பர் விபத்துகளைத் தடுப்பது மற்றும் நமது சாலைகளைப் பாதுகாப்பாக வைப்பது குறித்தும், நரம்பியல் ஆலோசகர் டாக்டர் மதுசூதன் விபத்து நடந்த இடத்தில் செய்ய வேண்டிய முதலுதவி குறித்தும் பேசினர்.
இந்நிகழ்வில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீஹரி, தலைமை மருத்துவர் மற்றும் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் ஜோஸ் ஜாஸ்பர்,மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை சீனியர் மருத்துவர் மதுசூதனன்,காவேரி மருத்துவமனை மார்கெட்டிங் பொது மேலாளர் மாதவன் மற்றும் டாக்டர்கள் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.