அய்யனார்குளம் பகுதியில் நெல் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. போர் கால அடிப்படையில்  நெல் பயிரை காப்பாற்ற எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி நிறுவனர் மேஜர் ரவிக்குமார் வேண்டுகோள்.

அய்யனார்குளம் பகுதியில் நெல் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. போர் கால அடிப்படையில்  நெல் பயிரை காப்பாற்ற எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி நிறுவனர் மேஜர் ரவிக்குமார் வேண்டுகோள்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா அய்யனார் குளம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள டிரான்ஸ்பார் வழியாக அந்த பகுதிகளில் உள்ள கிணறுகளுக்கு அரசின் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு பல ஆயிரம் ஏக்கரில்  நெல் பயிரிடபட்டுள்ளது . தற்போது சில நாட்களாக அடிக்கடி பீஸ் போவதால் நெல் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இலவச மின்சாரத்தை பயன்படுத்தி கிணற்று பாசானத்தை நம்பி உள்ள விவசாய பெருமக்கள்  தண்ணீர் பாய்ச்ச முடியாமல்

நெல் பயர்கள் கருகி விடுமோ என்ற அச்சத்திலும், கடன்பட்டு நெல் பயிற்செய்துள்ளதால் மன வேதனையில் உள்ளனர்.

தமிழக அரசும், மின்சார வாரிய அதிகாரிகளும் இந்த விசயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து அய்யனார் குளம் பகுதி நெல் விவசாயிகளையும், நெல் பயிர்களையும் பாதுகாக்க வேண்டும். என்று எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி தலைவர் மேஜர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்