அங்கன்வாடிகளுக்கு உதவிய சிறுத்தைகள்.!
அங்கன்வாடிகளுக்கு உதவிய சிறுத்தைகள்.!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வடக்கு ஒன்றியம் பேரையூர்,கோட்டூர், நச்சாந்துப்பட்டி ஆகிய ஊர்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி ஏற்றினர்.
பேரையூர்,கோட்டூர் அங்கன்வாடி குழந்தைகளுக்குஇனிப்பு வழங்கினர். மேலும் அங்கன் வாடிகளுக்கு தேவையான மின் விசிறி, புத்தகம், குழந்தைகள் அமரும் இருக்கை( பிளாஸ்டிக் பேபி சேர்கள்) உள்ளிட்ட பொருட்களை திருமயம் வடக்கு ஒன்றிய செயலர் திருமாபாண்டி வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் துரைச்சாமி, ஒன்றிய அமைப்பாளர் அம்மையப்பன், முகாம் செயலாளர்கள் சுரேஷ், பொன்.கணேசன் மற்றும் பலர்கலந்து கொண்டனர். மாவட்டச்செயலர் வெள்ளைநெஞ்சன் சிறப்புரையா ற்றினார். ரஞ்சித் வரவேற்றார். செல்வராஜ் நன்றி கூறினார்.