பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பூச்சொரிதல் விழா. பூக்களால் அலங்கரித்து பக்தர்கள் தரிசனம்.

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பூச்சொரிதல் விழா. பூக்களால் அலங்கரித்து பக்தர்கள் தரிசனம்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி நகரின் பல இடங்களில் பல வண்ண மலர்களை அலங்கரித்து தரிசனம் செய்தனர்.பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம்.

இதன் முன்னோட்டமாக பூச்சொரிதல் விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி நேற்று பரமக்குடியில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கோயில்களில் நுாற்றுக்கணக்கான தட்டுகளில் பூக்களை அலங்கரித்து வைத்திருந்தனர். அப்போது மேள தாளங்கள் முழங்க மலர்களை ஆண்களும் பெண்களும் சுமந்து சென்றனர்.பின்னர் இரவு 7:00 மணி முதல் ஆடல் பாடல், கரகாட்டம், பாட்டு கச்சேரிகள் என கோலாகலமாக நடந்தது.

தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு அனைத்து இடங்களில் இருந்தும் பூத்தட்டுக்கள் புறப்பாடாகி கோயிலை அடைந்தது.இதனால் பரமக்குடியின் பல்வேறு தெருக்கள் மின்னொளியால் ஜொலித்தன. இன்று காலை அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. விழாவையொட்டி பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்