பா.ஜ.க விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்  செயல்படுவதாக குற்றம்சாட்டி மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகை போராட்டம்.

பா.ஜ.க விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்  செயல்படுவதாக குற்றம்சாட்டி மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகை போராட்டம்.

திருச்சியில் இன்று பரபரப்பு.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 – ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 கட்டங்களாக தேர்தல் முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட தேர்தல் வரும் 1-ந் தேதி நடைபெற உள்ளது. 6 கட்ட தேர்தல்களிலும் தேர்தல் ஆணையம் பா.ஜ.க விற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியும் வரும் ஜூன் 4 -ந் தேதி நடைபெற உள்ள தேர்தல் எண்ணிக்கையை நேர்மையுடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதையடுத்து பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தேர்தல் ஆணையத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்