பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பிரச்சாரம். கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பு.
பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பிரச்சாரம். கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பு.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் கிராமம் ,கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள நாரணமங்கலம்
கிராமத்தில் வாக்குகள் சேகரித்தார்.
நாரணமங்கலம் மந்தைவெளியில் திரண்டிருந்த மக்களிடையே வேட்பாளர் கே.என். அருண் நேரு பேசியதாவது:-
இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையில் நல்ல விஷயங்கள் நிறைய கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி அனைத்தையும் நிறைவேற்றுவார்கள்.
தமிழகத்தில் முதலமைச்சரின் சிறப்பு திட்டமான காலை உணவு திட்டம், மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை திட்டம், மகளிர்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தி.மு.க.அரசின் பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
மேலும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வரும் ஏப்ரல் 19 -ந்தேதி நடைபெறும் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று, நாரணமங்கலம் மந்தைவெளியில் திரண்டிருந்த பொதுமக்களிடம் வேட்பாளர் கே.என்.அருண் நேரு பேசினார். தொ.மு.ச.வினர் தொ.மு.ச.கவுண்சில் பேரவை மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார், தொ.மு.ச.கவுண்சில் பேரவை மாவட்ட செயலாளர் ஆர்.ரெங்கசாமி ஆகியோர் தலைமையில் கிராமங்கள் தோறும் துண்டு பிரசுரங்கள் வழங்கி வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
இந்த பிரச்சாரத்தில் பெரம்பலூர்
மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன்,
ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழுத் தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி, மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் செ.வல்லபன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், கொளக்காநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் என்.ராகவன், காங்கிரஸ் கட்சி தேனூர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வ.சுப்ரமணியன், ஆர்.அருண், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா, மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், கிளைச் செயலாளர் எஸ்.கே.வைத்தியநாதன், விஜயகுமார்,சின்னசாமி, சீனிவாசன், ஞானசுந்தரம்,ரவி,வக்கீல்,
கிளை நிர்வாகிகள் பெ.வரதராஜ், செல்வக்குமார், பெ.முத்துகுமார் , ரா.நிதிஷ்குமார், பிச்சை, கலைமணி, மு.அசோக், மாவட்ட, நகர, பேரூர் நிர்வாகிகள், இளைஞரணி, மகளிர் அணி, கிளைச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.