ரஜினி கோவிலில் பொங்கல் விழா. சங்கம் வளர்த்த மதுரையில்.

ரஜினிக்கு கோவிலில் பொங்கல் விழா. சங்கம் வளர்த்த மதுரையில்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கார்த்திக். திருமணத் தகவல் மையம் நடத்தி வரும் இவர்,

ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். இதனால் தன் வாடகை வீட்டின் ஒரு அறையில் ரஜினிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த்திற்கு 250 கிலோ எடை கொண்ட கருங்கல் சிலை வைத்து கோயில் அமைத்தார். அதனைத் தொடர்ந்து, தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடத்தி வந்த நிலையில் ரஜினிகாந்த் பிறந்த நாளான 12.12.2023 அன்று ரஜினி சிலைக்குக் கோவில் கருவறையில் வைப்பது போலத் திருவாச்சி அமைத்துச் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

3 அடி உயரத்தில், 250 கிலோ எடை கொண்டு கருங்கல்லினால் அந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலைக்கு அவரே அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டுகிறார். இவரது செயலுக்கு அவரது பெற்றோரும் மனைவியும் உறுதுணையாக இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் ரஜினியின் படங்களை வைத்து கும்பிட்டு வந்தவர். பிறகு கோவிலில் சிவனுக்கு செய்கிறார்களே அதே மாதிரி கருங்கல்லில் ரஜினிக்கு ஆர்டர் கொடுத்து சிலை செய்துள்ளார். இந்தியாவில் இல்லை உலகத்திலேயே ஒரு நடிகருக்கு கருங்கல்லில் சிலை வைத்ததாக சரித்திரமே கிடையாது. கோவிலில் எப்படி வழிபாடு செய்வோமோ அதேபோன்று யாகம் வளர்த்து, பால் அபிஷேகம் செய்து ஆராதனை காட்டி கும்பாபிஷேகம் நடத்திவருகிறார்” கார்த்திக்

இந்த நிலையில், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (ஜனவரி 14) ரஜினிக்காகக் கட்டப்பட்ட கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தனது ஊழியர்களுடன் பொங்கல் விழாவினை கொண்டாடினார்.

அரிசி காய்கறிகள், தேங்காய், பழம் என அனைத்தையும் சிலை முன் இலையில் வைத்துப் பொங்கல் படையலிட்டுச் சிறப்பு ஆராதனை செய்தார். இதனை அடுத்து, பின்னர் ரஜினி கோயிலில் வைக்கப்பட்ட பொங்கலை அனைவருக்கும் பகிர்ந்து அளித்துப் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்.

இது குறித்து கார்த்திக் “வீட்டில் உள்ளவர்களுடன் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். கடந்த அக்டோபர் 26ஆம் தேதி ரஜினிக்குச் சிலை வைத்து அவரை சாமியாக நினைத்து வழிபட்டு வருகிறோம். இந்த நிலையில், ரஜினி சிலை முன் பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கலை வழங்கி கொண்டாடினோம் என்றிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்