சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற பிரபல டிவி செய்தியாளர் உயிரிழப்பு.

சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற பிரபல டிவி செய்தியாளர் உயிரிழப்பு. சோகத்தில் பத்திரிக்கையாளர்கள்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், பிற்பகல் வேளையில், பொதுமக்கள் பலரும் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், அருப்புக்கோட்டை தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜா சங்கர், இன்று (மே 2) காரியாபட்டி அருகே ஆவியூரில் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் சென்று செய்தி சேகரித்துவிட்டு உடல் சோர்வடைந்த நிலையில் மீண்டும் அருப்புக்கோட்டைக்கு வந்துள்ளார்.

பின்னர், அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அவரது குடும்பத்தினர் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்