கிருஷ்ணகிரிக்கு நடை பயணம் வரும் அன்புமணிக்கு கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு. பா.ம.க செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு.
கிருஷ்ணகிரிக்கு நடை பயணம் வரும் அன்புமணிக்கு கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு. பா.ம.க செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு.
பா.ம.க.,விற்கு ராமதாஸ் தான் தலைவர். வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. நீக்கும் அதிகாரம் ராமதாசிற்கு மட்டும் தான் உள்ளது’ என்று திண்டிவனம் அருகே ஓமந்துாரில் நடந்த பா.ம.க.,மாநில செயற்குழு கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி பேசினார்.
பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்த அன்புமணியின் பதவியை அதிரடியாக பறித்து, அவரை கட்சியின் செயல் தலைவராக கட்சியின் நிறுவனரான ராமதாஸ் நியமித்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு, தந்தை-மகன் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து உச்சகட்டத்தை எட்டியது. இதன் தொடர்ச்சியாக ராமதாஸ், பா.ம.க.,வில் தனக்கு வேண்டியவர்களை மாநில, மாவட்ட நிர்வாகிகளாக நியமித்தார். இதற்கு பதிலாக அன்புமணியும் தனக்கு வேண்டியவர்களை கட்சியில் நிர்வாகிகளாக நியமித்து அதிரடி காண்பித்தார்.
இந்த சூழ்நிலையில், நிர்வாகக்குழுவில் இடம் பெற்றிருந்த அன்புமணியை, ராமதாஸ் கடந்த, 5ம் தேதி அதிரடியாக நீக்கிவிட்டார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்துாரில் நேற்று காலை 11:00 மணிக்க பா.ம.க.,மாநில செயற்குழு கூட்டம், நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இதில் கட்சியின் கவுரவு தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ., வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்தில் முதன்முதலாக ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி கலந்து கொாண்டார். கூட்டம் துவங்கிய உடன் குறிப்பிட்ட நிர்வாகிகள் மட்டும் பேசுவதற்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் பேசும் போது, ‘ பா.ம.க.,வையும், வன்னியர் சங்கத்தையும், கட்சி சின்னத்தையும் உருவாக்கியவர் ராமதாஸ். அவருக்கு தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது. அன்புமணி கிருஷ்ணகிரிக்கு நடைபயணம் வரும் போது, அவருக்கு கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிப்போம் என்றார்கள்.