முல்லை பெரியாறு அணையை உடைக்க துடிக்கும் கேரளா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
முல்லை பெரியாறு அணையை உடைக்க துடிக்கும் கேரளா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தின் தீர்க்க முடியாத பிரச்சினைகளில் ஒன்று முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை. இந்நிலையில் கேரளா அரசு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து அதன் அருகே மற்றொரு புதிய அணையை கட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கியது மட்டும் மில்லாமல் திட்டங்களையும் வகுத்து வருகின்றது. பசுமை தீர்ப்பாயம் உச்ச நீதிமன்றம் இப்படி பல முக்கிய துறைகள் இடமிருந்து முறையான அனுமதி பெற்ற பின்பு தான ஒரு புதிய அணையை எந்த மாநிலமாக இருந்தாலும் கட்ட முடியும். அப்படி இருக்க எதையும் பின்பற்றாமல் தன்னிச்சை போக்கில் , தான்தோன்றி தனமாக அணையை கட்ட கேரளா அரசு முடிவு செய்து இருந்த நிலையில் .
பெரியார் வைகை பாசன விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பல அமைப்புகள் இணைந்து புதிய அணைக்கட்ட விடமாட்டோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கேரளா அரசை கண்டித்து மாநில எல்லையான லோயர் கேம் பகுதியில் பேரணியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி கேரளா அரசுக்கான எதிர்ப்பு குறலை வலுவடையச் செய்திருக்கிறது.தமிழக அரசு மற்றும் மத்திய அரசு உடனடியாக இப் பிரச்சினையில் தலையிட்டு கேரளா அரசுபுதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்தி அணைக்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு சுமுகமான நிரந்தர தீர்வை பெற்றுத் தர வேண்டுமாய் கோரிக்கையை முன்வைக்கின்றனர் அன்வர் பாலசிங்கம் தலைமையிலான பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர்.