2026 நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் சங்கரன்கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு.
2026 நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் சங்கரன்கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுரண்டை ரோட்டில் உள்ள ஆப்பிள் நகர் அருகில் உள்ள திடலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு
தென்காசி வடக்கு மாவட்டம் சார்பாக விஜய் பிறந்தநாள் விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம், 1551 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி
ஆனந்த் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன், இணைச் செயலாளர் வைர மணி, கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், ஒய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான டாக்டர் அருண்ராஜ், . முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட்செல்வன், செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ், திருநெல்வேலி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ராஜகோபால், திருநெல்வேலி வடக்கு மாவட்ட கழக இணை செயலாளர் மரிய ஜான், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜாகிர் உசேன், தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் நியாஸ், தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ், தென்காசி கிழக்கு மாவட்ட செயலாளர் விபின் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பேசியதாவது:- பொது கூட்டத்தை பல லட்சம் செலவு செய்து தென்காசி மாவட்ட செயலாளர் மாரியப்பன் சிறப்பாக செய்துள்ளார். கட்சியில் இணைந்துள்ள ஓய்வு பெற்ற ஐ ஆர் எஸ் அதிகாரி டாக்டர் அருண் ராஜுக்கு இன்னும் 19 வருடங்கள் சர்வீஸ் உள்ளது. தளபதி விஜய் தமிழகத்தில் நல்லாட்சி தர வேண்டும் என்பதற்காக தனது அரசு உயர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். எந்த பிரதிபலனும் பாராமல் கடந்த 32 ஆண்டுகளாக நலத்திட்ட உதவிகளை தளபதி விஜய் வழங்கி உள்ளார்.
நெல்லையைச் சார்ந்த ஒரு பெண் சென்னையில் விபத்தில் காயம் அடைந்தபோது அவருக்கான சிகிச்சை செலவையும் ஏற்றுக் கொண்டவர் தளபதி விஜய். தந்தை இல்லாத சிறுவனுக்கு படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டவர் தளபதி விஜய். 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம்அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்.
கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் சூர்யா (எ) அகல்யா, மாவட்ட பொருளாளர் உடையார், மாவட்டத் துணைச் செயலாளர்கள் மகேஷ், மீனாட்சி, திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், மனிஷா, திருநெல்வேலி மண்டல வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் சாமி ஏலியஸ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.