ஸ்ரீரங்கம் RTO அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை. கணக்கில் வராத ரூ69000 ரூபாய் சிக்கியது.
ஸ்ரீரங்கம் RTO அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை. கணக்கில் வராத ரூ69000 ரூபாய் சிக்கியது.
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் அரசு அலுவலகங்களில்அதிகாரிகள், ஊழியர்கள் கையூட்டு,பரிசு பொருட்கள் பெறுவதை தடுக்கும் வகையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.அந்த வகையில்
திருச்சி,ஸ்ரீரங்கம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் போக்குவரத்து கண்காணிப்பாளர் சோமசுந்தரிடம் ரூ 20300, வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) பவுலின் தெரசாவிடம் ரூ 40200, தற்காலிக ஊழியர் ஒருவரிடம் ரூ 8500 என, கணக்கில் வராத 69 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.