தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் : கடந்த 5 மணி நேரத்தில் சாத்தான்குளத்தில் 122 மிமீ மழை பதிவு..!

தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் : கடந்த 5 மணி நேரத்தில் சாத்தான்குளத்தில் 122 மிமீ மழை பதிவு..!


தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பலத்த மழை பெய்தது. காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலான ஐந்து மணி நேரத்தில் அதிக பட்சமாக சாத்தான்குளத்தில் 122 மிமீ மழை பதிவாகி உள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடித்த வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மேலும் அதிகரித்து, பலத்த மழையாக பெய்து வருகிறது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணியில் இருந்து பகல் 12 மணி வரையிலான கடந்த 5 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு: தூத்துக்குடி: 9.30 மி.மீ, ஸ்ரீவைகுண்டம்: 64 மி.மீ, திருச்செந்தூர்: 48 மி.மீ, காயல்பட்டணம்: 32, குலசேகரபட்டணம்: 51, சாத்தான்குளம்: 122 மி.மீ, கோவில்பட்டி: 5 மி.மீ, கயத்தார்: 2 மி.மீ, கழுகுமலை: 6 மி.மீ, கடம்பூர்: 3 மி.மீ, எட்டயபுரம்: 3.40 மி.மீ, விளாத்திகுளம்: 7 மி.மீ, காடல்குடி: 10 மி.மீ, வைப்பார்: 25 மி.மீ, சூரங்குடி: 20 மி.மீ, ஓட்டப்பிடாரம்: 9 மி.மீ, மணியாச்சி: 00 மி.மீ, வேடநத்தம்: 15 மி.மீ, கீழஅரசரடி: 00 மி.மீ என மொத்தம்: 431.70 மிமீ மழை பதிவாகி உள்ளது.


இற்கிடையே, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அணைக்கட்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், அதிகளவு வெள்ளம் திறக்க வாய்ப்பு உள்ளதால், தாமிரபரணி, கோதையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு 100 பேர் கொண்ட 4 பேரிடர் மீட்புப் குழுவினர் விரைந்து வருகின்றனர்.

இது தவிர, வானிலை மையம் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்