தென்காசியில் ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.
தென்காசியில் ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.
தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கதிரேசன் (34) இவர் தனது நிலத்திற்கு தரிசு நிலச் சான்று பெறுவதற்காக மத்தளம் பாறை பகுதி கிராம நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு உள்ளார். அதற்கு அவர் வருவாய் ஆய்வாளர் தர்மராஜ் நேரில் பார்க்கும் படி பரிந்துரை செய்துள்ளார். இதனை முன்னிட்டு விவசாயி கதிரேசன் தென்காசி ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் தர்மராஜை அணுகி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து விவசாயி கதிரேசனிடம் வருவாய் ஆய்வாளர் தர்மராஜ் தரிசு நில சான்றிதழ் வழங்குவதற்காக நிலத்தை அளவீடு செய்வதற்காக ரூபாய் 20000 வரை பேரம் பேசி உள்ளார். அதற்கு விவசாய கதிரேசன் பேரம் பேசி ஐந்தாயிரம் ரூபாய் முதலில் தருவதாக ஒப்புக்கொண்டு அதனை நேரில் தருவதாக கூறியுள்ளார்.
பின்னர் இது தொடர்பான புகாரை தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பால் சுதர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று வருவாய் ஆய்வாளர் தர்மராஜிடம் விவசாயி கதிரேசன் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைக்கு இணங்க பவுடர் தடவிய ரூபாய் 5 ஆயிரத்தை வழங்கும் போது கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் வருவாய் ஆய்வாளரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.