திருச்சி கம்பரசம்பேட்டையில் விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை அடைப்பு. கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு.

திருச்சி கம்பரசம்பேட்டையில்
விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை அடைப்பு. கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு.

திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா கம்பரசம் பேட்டை ஊராட்சி மல்லாச்சிபுரம், கம்பரசம்பேட்டை பகுதி கிராம மக்கள் கிருஷ்ணமூர்த்தி என்கிற சுப்பு தலைமையில் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,

மேலே குறிப்பிட்டுள்ள விலாசத்தில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்களது விவசாய நிலத்திற்கு உரம், டிராக்டர் கொண்டு செல்லும் பாதையை ஒருவர் அடைத்து வீட்டு மனையாக பிரித்துள்ளார்.
அந்த வீட்டு மனை பிரிவில் சுமார் 6 பாதைகள் உள்ளன 6 பாதைகளையும் அடைத்து காம்பவுண்ட் சுவர் எழுப்பி உள்ளதால் நாங்கள் எங்கள் விவசாய நிலத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது ஆகவே காம்பவுண்டு சுவரை அப்புறப்படுத்தி ஏற்கனவே உள்ள பாதையை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்