பம்மலில் கஞ்சா விற்பனை. ஒடிசாவை சேர்ந்த கணவன்-மனைவி சிறையில் அடைப்பு.
பம்மலில் கஞ்சா விற்பனை. ஒடிசாவை சேர்ந்த கணவன்-மனைவி சிறையில் அடைப்பு.
சென்னை பம்மல் அருகே நாகல்கேணியில் உள்ள பி.கே.எஸ்., மீன் மார்க்கெட் அருகே, நேற்று முன்தினம், சங்கர் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில், ஒரு ஆணும், பெண்ணும் இருசக்கர வாகனத்தில் நீண்ட நேரம் நின்றிருந்தனர். அவர்களை விசாரித்ததில், ஒடிசா மாநிலம், நுவாபாடா மாவட்டத்தை சேர்ந்த ஷியாம் ஹான்ஸ், 29, பிராத்திமா, 33, என்பதும், ஒடிசாவில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வந்து, திருப்போரூரில் தங்கி, கட்டட வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
விசாரரணையில் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். அவர்களிடம் சோதனை நடத்தியதில், கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும், இருவரும், கணவன் – மனைவி என்பதும் தெரியவந்தது.
மாதம் ஒரு முறை, ஒடிசாவிற்கு சென்று ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து, 2 கிலோ மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.