மனு கொடுத்த எங்களை என்கவுண்டரில் சுட்டுக் வீழ்த்தி விடுங்கள். கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்த தமிழ்ப் பேரரசு கட்சியினர்.

மனு கொடுத்த எங்களை என்கவுண்டரில் சுட்டுக் வீழ்த்தி விடுங்கள். கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்த தமிழ்ப் பேரரசு கட்சியினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் தினசரி சந்தை விதிகளை மீறி செயல்பட்டு வருவதாகவும், மேலும் சட்ட விரோதமாக கிணறுகளை மூடி உள்ளதாகவும், மேலும் நீர்வரத்து ஓடை மூடப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி இந்த தினசரி சந்தை தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், , சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் திட்டங்குளம் தனியார் சந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 2023ல் புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் திட்டங்குளம் ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,
இந்நிலையில் அந்த தனியார் தினசரி சந்தையில் நிரந்தர கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் துணை போவதாகவும், சட்ட விதிமீறலில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு துணை போகும் நிலை இருப்பதால் கோரிக்கை மனு அளித்த தங்களை என்கவுண்டரில் காவல்துறை சுட்டு வீழ்த்த உத்தரவு விட வலியுறுத்தி தமிழ் பேரரசு கட்சியினர் அதன் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் சரவணன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்