ஏரிகள், குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு.
ஏரிகள், குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு.
திருச்சி திருவரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட மண்பாண்ட கைவினை தொழிலாளர்கள் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களின் தொழிலுக்கு தேவையான மூலப்பொருளான களிமண் தேவைப்படுகிறது. அந்த களிமண்ணை எடுக்கச் சென்றால் வண்டியையும், களிமண்ணையும் காவல்துறையினர் பிடுங்கி வைத்துக்கொண்டு வழக்கு போடுவேன் என கூறுகிறார்கள். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுகின்றது.
எனவே தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் திருவானைக்காவல் பகுதியில் உள்ள அரியப்பிள்ளை குளம் மற்றும் திருச்சி மாவட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க தங்களுக்கு அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில் திரண்டு வந்து, நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
நிகழ்வில் தாகூர் தெரு முருகன், வீரேஸ்வரம் சங்கர், பஜார் மைதீன் இர்ஃபான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.