பாக முகவர்களிடம் புதிய வாக்காளர் பட்டியலை வழங்கிய சிவகங்கை நகர்மன்ற தலைவர்.
பாக முகவர்களிடம் புதிய வாக்காளர் பட்டியலை வழங்கிய சிவகங்கை நகர்மன்ற தலைவர்.
சிவகங்கை நகர் திமுக பாகமுகவர்களிடம் புதிய வாக்காளர் பட்டியலை நகர் கழக செயலாளரும் நகர் மன்ற தலைவருமான சி.எம்.துரைஆனந்த் அவர்கள் வழங்கினார். வருகிற 16-11-2024, 17-11-2024 சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் சேர்த்தல் முகாமில் தவறாமல் முகாம் நடைபெறும் இடத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் சேர்த்தல், நீக்கல், திருத்தம் பணிகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.