ஜீவசமாதி சாமியாரை மீட்ட சிவகங்கை சேர்மன்.
ஜீவசமாதி சாமியாரை மீட்ட சிவகங்கை சேர்மன்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட மேலவாணியங்குடி மானாமதுரை-தஞ்சை பைபாஸ் சாலையில் உள்ள ஆசிரமம் ஒன்றில் மதுரையை சேர்ந்த சாமியார் சுரேந்தர் என்பவர் பக்தர்களுக்கு தொடர்ந்து ஆசிகள் வழங்கி வந்தார். இந்த ஆசிரமத்துக்கு பல மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமியாரை தரிசித்து சென்றுள்ளனர். இந்த நிலையில் தான் சமீப காலமாக சாமியாரை தரிசினம் செய்ய
மடத்தில் உள்ள நிர்வாகிகள் அனுமதி மறுத்திருக்கின்றனர். மேலும் சாமியாரை ஜீவசமாதி அடைய செய்யும் நோக்கில் அவரை அடைத்து வைத்திருந்ததாகவும், அதற்காக அவருக்கு உணவு வழங்காமல் கண்வலி மற்றும் காய்ச்சல், சுகரால் கடந்த மூன்று வாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மதுரையை சேர்ந்த பக்தர்கள் சிலர் சிவகங்கை நகராட்சி சேர்மன் அவர்களிடம் கடிதம் மூலமாக புகார் அளித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் சிவகங்கை நகராட்சி சேர்மன் துரை ஆனந். இந்த விவகாரத்தை சிவகங்கை நகர காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் தான் சேர்மன் துரை ஆனந்த், நகர காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி உள்ளிட்ட காவலர்களுடன் அங்கு சென்று அதிரடியாக ஆசிரமத்தில் நுழைந்து, உடல்நிலை குறைவு ஏற்பட்டு இருந்த சாமியாரை மீட்டு 108 வாகன மூலம் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். சாமியாரின்
உடல்நிலையை மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். சிவகங்கை சேர்மனின் இந்த அதிரடியான செயலை உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட மக்களும் பாரட்டி வருகின்றனர்.