சிவாஜி கணேசன் 23-வது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அகில இந்திய சிவாஜி மன்றத்தினர்.
சிவாஜி கணேசன் 23-வது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அகில இந்திய சிவாஜி மன்றத்தினர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 23-வது ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி சிவநதாகுளம் சந்திப்பில் வைத்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பி.எம்.எட்வின்பானு தலைமை வகித்தார். வழக்கறிஞர் எஸ்.டி.அழகுவேல், எம்.கோமதிநாயகம், ஓம் சக்தி சங்கர். தூத்துக்குடி காமராஜர் சிவாஜி நற்பணி மன்ற துணைத் தலைவர் ஏ.ஜே.அருள்வளன், சேவியர் மிஸியர், ஆர்.வி.தனபாலன், என்.முருக பெருமாள், வி.சிவாஜிரமேஷ். வி.சிவாஜி கணேசன், சிவாஜி, முருகேசன். வி.ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினர்.