திருச்சி காட்டூர் அரசு பெண்கள் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம். மாணவிகள் சேர்க்கையை அதிகப்படுத்துவது என தீர்மானம்.
திருச்சி காட்டூர் அரசு பெண்கள் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம். மாணவிகள் சேர்க்கையை அதிகப்படுத்துவது என தீர்மானம்.
திருச்சி பாப்பாகுறிச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் துணைத் தலைவர் எஸ் எஸ் ரஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருவரம்பூர் வட்டார கல்வி ஆசிரியர் பயிற்றுநர் மகேஷ் கலந்துகொண்டு உரையாற்றினார். பட்டதாரி ஆசிரியர் சொர்ண தீபா கூட்டத்தின் கருப்பொருள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பட்டதாரி ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு ரவிச்சந்திரன். சுஜாதா. வேளாங்கண்ணி மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் கல்வி ஆண்டில் மாணவியர் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்வது., பிளஸ் டூ முடிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதலை உருவாக்குதல். நான் முதல்வன் திட்டத்தினை மாணவிகளுக்கு எடுத்துரைத்தல்
பள்ளிக்கூடத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது .
பள்ளி இட பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது. ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கலைச்செல்வி நன்றி உரையாற்றினார்.