விராலிமலை மலைப்பாதையில் சிலைகள் உடைப்பு. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, காவல்துறை ரோந்தை அதிகப்படுத்த பக்தர்கள் கோரிக்கை:-
விராலிமலை மலைப்பாதையில் சிலைகள் உடைப்பு. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, காவல்துறை ரோந்தை அதிகப்படுத்த பக்தர்கள் கோரிக்கை:-
விராலிமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு தரிசனம் செய்ய நாளுக்கு நாள் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் பெருமுயற்சியால் மலை மீது தார் சாலை அமைக்கப்பட்டு வழியெங்கும் சிவபெருமான், விநாயகர், அறுபடை வீடுகளின் முருகன், மான் சிங்கம் குரங்கு போன்ற சிலைகள் நிறுவப்பட்டு அழகாக காட்சியளித்தது.
தற்பொழுது இந்த சிலைகள் சமூக விரோதிகள் சிலரால் முழுவதுமாக உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இது போன்ற சம்பவம் நடைபெற்று புகார் அளித்தும், மீண்டும் அதே போன்று சம்பவம் நடைபெற்றுள்ளது வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.
இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
கோவில் மலைப்பாதையில் முன்பு போல காவல்துறை ரோந்தை அதிகப்படுத்தவும், சிலைகள் அருகில் யாரும் செல்ல முடியாதபடி தடுப்பு வேலிகள் அமைக்கவும், கோவிலில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும், இரவு நேரங்களில் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதால் பாதையை அடைத்து வைக்கவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த சிலை உடைப்பு சம்பவம் விராலிமலை சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் பக்தர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.