உலக மண்வள தினவிழா விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கிய மாணவர்கள்.

உலக மண்வள தினவிழா விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கிய மாணவர்கள்.

உலக மண்வள தினத்தை ஒட்டி, விவசாயிகளின் உரப் பயன்பாட்டை குறைக்கவும், மகசூலை பெருக்கும் வகையிலும், திருச்சி பொன்மலை கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கினர்.

நாமக்கல் மாவட்ட வேளாண் உழவர் நலத்துறையில், திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில், உலக மண்வள தினவிழா நடைபெற்றது. பள்ளியின் முதல்வர், பள்ளி ஆசிரியர்கள் முள்னிலையில், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் மண்வள தினவிழா உறுதிமொழியை ஏற்றனர். பள்ளியின் முதல்வர் திருமதி ரீமா ஸ்டெல்லா ஜெயசந்திரன் வரவேற்றார்.

நாமக்கல் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் செங்கோட்டுவேல், ‘நடப்பாண்டின் மண்வள தினத்தின் கருப்பொருளான, “மண்ணைப் பாதுகாத்தல், மண்ணை அளவிடுதல், நிர்வகித்தல், கண்காணித்தல்” குறித்து விளக்கி பேசினார்.

தொடர்ந்து, ‘மண்ணின் ‘ஆர்கானிக்’ (அங்ககத்) தள்மையினை அதிகரிக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும், சுழற்சி முறையில் மண் பரிசோதனை மூலம் பயிருக்கு தேவையான உரங்களை நிலத்தில் இட்டு உரப்பயன்பாட்டை குறைத்தல் குறித்தும்,

‘மண்ணில் நுண்ணுயிர் பெருக்கத்தினை அதிகரிக்க, நுண்உரங்கள், பசுந்தாள் உரங்களை பயன்படுத்துதல்’ பற்றி விளக்கினார்.

பள்ளி ஆசிரியர் சுபம் செளத்ரி பேசியபோது, ‘மண்ணின் வளமே மனிதனின் நலம். எனவே, மாணவ பருவத்திலேயே மண் வளப் பாதுகாப்பின் அவசியத்தை பற்றி மாணவர்கள் நன்கு உணரவேண்டும்’ என்றார்.

அதன்படி, மாணவர்கள் மண்வளத்தை பாதுகாப்பதை இப்பருவத்திலேயே உணரவேண்டும் என்பதற்காக, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கிழக்குறிச்சி கிராமத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

நாமக்கல் மாவட்ட மண்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளியில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, காரீப் மற்றும் இரபி ரக பருவத்தில், 25 மண் மாதிரிகளை சேகரித்தனர்.

இதன்மூலம், விவசாயிகளின் வயல்களுக்கே அழைத்துச் சென்று மண் மாதிரிகளை சேகரிக்கும் முறைகளை மாணவர்களுக்கு செயல்முறையாக காண்பித்தனர். மேலும், பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மண் ஆய்வுக் கூடத்தில், வேளாண் அலுவலர்கள் உதவியுடன் மண் மாதிரிகளை ஆய்வு செய்து, முடிவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்தனர்.

மேலும், மாணவர்கள் தயார் செய்த மண் வளஅட்டைகளை, கீழக்குறிச்சி வவசாயிகளுக்கு வழங்கினர். இதன்மூலம், மண் ஆய்வின் அவசியத்தையும், மண்ணில் உள்ள சத்துகளின் அளவு மற்றும் மண் வள அட்டையின்படி பரிந்துரைக்கப்பட்ட அளவு உரமிடுதல் மூலம் விவசாயிகள் உரச்செலவினை குறைத்து, மகசூலை அதிகரிக்கலாம் என்பதையும் மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கினர்.

இதனால் மண் வளம் உறுதியாக பாதுகாக்கப்படுவதுடன், விவசாயமும் செழிக்கும் என்பதையும் எடுத்துக் கூறினர். அதன்பின் நடந்த மண்வளம் குறித்த இணைய வினாடி வினாவில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் ஆண்டோ ஐசக், மஞ்சுஸ்ரீ, சசிரேகா, கதிர்வாணி ஆகியோர் செய்திருந்தனர்.
மண்பரிசோதளை நிலைய உதவி வேளாண் அலுவலர் தேவி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்