போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் உறுதி ஏற்பு.
போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் உறுதி ஏற்பு.
சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம், நவீன் மனநல மருத்துவமனை, போலீசார் சார்பில், சூலுார் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் போதைபொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உதவி தலைமையாசிரியர் திருஞானம் தலைமை வகித்து பேசுகையில், எந்தவொரு வடிவத்திலும் போதை பொருட்களை மாணவர்கள் பயன்படுத்த கூடாது. அது உங்கள் எதிர்காலத்தையே இருண்ட தாக்கி விடும், என்றார். மன நல மருத்துவர் ப்ரீத்தி ஷா பேசுகையில், ஒரு முறை தான், என, பயன்படுத்தினாலும், போதை பொருட்கள் உங்களை அடிமையாக்கி விடும்.
உடலும், மனமும் கெட்டு, வாழ்க்கையே சீரழிந்து விடும். சமுதாயத்தையே பாதிக்கும் போதை பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டும், என்றார். எஸ்.ஐ., அசோக்குமார், பாரதி ராஜன் ஆகியோர் பேசினர். போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் உறுதி ஏற்றனர்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கதிர்வேல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.