திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கொடி ஏற்று விழா. மாவட்டத் தலைவர் இன்டர்நெட் ரவி தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கொடி ஏற்று விழா. மாவட்டத் தலைவர் இன்டர்நெட் ரவி தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய மாநகர் மாவட்டம் சார்பில் ஜி.கே.மூப்பனாரின் 93வதுபிறந்தநாள் விழா சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில்
கொண்டாடப்பட்டது. விழாவுக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர்
இன்டர்நெட் ந.ரவி தலைமை தாங்கி, தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) கொடியினை ஏற்றி,அலங்கரிக்கப்பட்ட ஜி.கே.மூப்பனாரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர் ராஜூ , மாநில சிறப்பு அழைப்பாளர் அன்னபூரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகி வரகனேரி சரவணன் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார், அண்ணா நகர் நடராஜ் இனிப்பு வழங்கினார், வெங்கடேஷ் மரக்கன்றுகள் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாநில கொள்கை பரப்பு செயலாளர் மதிவாணன், மாநில இணைசெயலாளர் ஐ.எஸ். விஜய், இளைஞர் அணி தனசேகர், கமல், மாலிக், சிந்தாமணி பாண்டியராஜன், தாராநல்லூர் பிரபு, சிவசக்தி வெங்கடேசன், ரவிச்சந்திரன், செந்தண்ணீர்புரம் சுப்பிரமணியன், குட்டிமணி, வடிவேலு, சோமு, மரக்கடை காசிம், பாலக்கரை கண்ணன் , முருகேசன் ஹரி, டாக்டர் லட்சுமி நந்தகுமார், மாணவரணி கார்த்திக், லோகேஷ், உறையூர் ஐயப்பன், சுப்பிரமணியன், சந்துக்கடை அலாவுதீன், பேக்கரி சரவணன், ராஜேஷ், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.