ஓராண்டுக்கு முன்பாகவே சட்டமன்ற தேர்தலை தமிழகத்தில் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டம். முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு.
ஓராண்டுக்கு முன்பாகவே சட்டமன்ற தேர்தலை தமிழகத்தில் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டம். முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு.
மின்கட்டண உயர்வினை கண்டித்தும், கட்டண உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தியும் , நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை திமுக அரசு நிறுத்த முயற்சிப்பதாக கூறி தமிழக முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்,, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என் கே பெருமாள், சின்னப்பன், மோகன் மற்றும் அதிமுக நகர ஒன்றிய செயலாளர்கள், அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பேசுகையில்
ரேஷன் கடைகளில் மக்களுக்கு எவ்வித பொருட்களும் கிடைப்பதில்லை, எதற்கெடுத்தாலும் டுவிட்டர் போடும் நடிகர் கமல்ஹாசன் மின்கட்டண உயர்வுக்கு ஏன் கண்டித்து டுவிட்டர் போடவில்லை நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வந்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தை கொஞ்சம் போர் அடிக்காமல் மக்கள் படத்தை பாருங்கள். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் *மனிதர்களின் ரத்தத்தை குடிக்கும் உனக்கு மண்ணிலே இடம் எதற்கு*என்று வசனம் பேசிக்கொண்டே தனது கைவிரல்களால் வர்மக்கலை மூலம் தவறு செய்தவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் தண்டனை வழங்குவார்.
தமிழக அரசு உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வும் மனிதர்களின் ரத்தத்தினை உரியும் நிகழ்வுதான்.. மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து இந்தியன் 2 திரைப்படத்தைப் போல நடிகர் கமலஹாசன் தண்டனை வழங்குவாரா?
இந்த ஆட்சி இருக்கலாமா என்று ஒரு அறிக்கையாவது நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ளாரா?
தமிழக சட்டப்பேரவைக்கு ஓராண்டுக்கு முன்பாகவே 2025ல் தேர்தலை நடத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு தேர்தல் நடத்தி தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டம் சுட்டலாம் என்று நினைக்கிறார். ஆனால் மக்கள் பட்டம் சூட்ட மாட்டார்கள் மட்டம் அடிப்பார்கள் என்றார்.