தொடரும் தமிழக மீனவர் கைது; சிங்கள கடற்படை அட்டூழியம் தமிழக அரசிற்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் வேண்டுகோள்.

தொடரும் தமிழக மீனவர் கைது; சிங்கள கடற்படை அட்டூழியம் தமிழக அரசிற்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் வேண்டுகோள்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 600 மீனவர்கர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் காணாமல் ஆக்கப்பட்டவர்களும் ஏராளமான பேர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மீனவர் படகுகள், உடமைகள் சிங்கள ராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை, நம் மீனவர்கள் மீது குற்றம் சாட்டி இந்த பாதக செயல்களில் ஈடுபடுகிறது. 1982 சர்வதேச கடல் சட்டப்படி 22.2 கி.மீ (12 கடல் மைல்) ஒரு நாட்டின் கடல் எல்லையாகும். அப்படி பார்த்தால் இந்தியாவின் வேதாரண்யம் கடற்ரையில் இருந்து 27 கி.மீ-யில் இலங்கை கடற்கரையை அடைந்துவிட முடியும். இதில் 22.2 கி.மீ. என்பது இலங்கை கடலோர பகுதிக்குள் போய் முடியும். இந்த சர்வதேச எல்லையை எவ்வாறு கண்டுபிடிப்பது? இலங்கை கடற்படை திட்டமிட்டு இந்திய மீனவர்களை மீன்பிடிக்க முடியாமல் செய்கிறது. இந்திய கடற்படையோ இலங்கை கடற்கடைக்கு துணையாக உள்ளதே தவிர தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக இல்லை. காங்கிரஸ் ஆண்டாலும், பா.ஜ.க. ஆண்டாலும் அது இந்திய அரசாகத்தான் உள்ளதோ தவிர தமிழர்களுக்கான தமிழக மீனவர்களுக்கான அரசாக இல்லை.
கச்சத்தீவை இந்திரா காந்தி தாரை வார்த்துவிட்டார் என்ற பல்லவியை தொடர்ந்து பாடும் பா.ஜ.க. அதை மீட்பதற்கான எந்த முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே கச்சத்தீவை மீட்பதற்கு தமிழக மீனவர்களை காப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்த உடனடியாக ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நாம் வற்புறுத்தாவிட்டால், குஜராத் மீனவனை பற்றி மட்டுமே கவலைப்படும் மத்திய அரசு தமிழக மீனவனை பற்றி ஒரு போதும் அக்கறைப்படாது. எனவே மத்திய பா.ஜ.க. அரசை நிர்பந்திக்க, உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை மீனவர் நலன் காக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேண்டுகிறது.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்