இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை. தென்காசி வெதர்மேன் எச்சரிக்கை.
இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை. தென்காசி வெதர்மேன் எச்சரிக்கை.
இலங்கை அருகை நீடித்த காற்று சுழற்சி மேலும் மேற்கு நோக்கி நகருகிறது. இந்த காற்று சுழற்சி காரணமாக டிசம்பர் 16 ம்தேதி முதல் இராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடையும்.
குறிப்பாக இராமேஷ்வரம் தங்கச்சிமடம் பாம்பன் தனுஷ்கோடி காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம் திருச்செந்தூர் சாத்தான்குளம் பெரியதாழை உவரி குட்டம் கூடன்குளம் ஆகிய கடலோர பகுதிகளில் டிசம்பர் 16 ம்தேதி முதல் இரவு நேரங்களில் கனமழை – மிக கனமழை பெய்யும்.
இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் திருச்செந்தூர் 711 மிமீ மழையை பெற்றுள்ளது. வரும் நாட்களிலும் தினசரி இரவு நேரங்களில் அதிகம் மழை பெய்யும் என்பதால் திருச்செந்தூர் 1000 மிமீ ஐ தாண்டி மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .எனவே தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறுவுறுத்துகிறோம்.