சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது 10 நாட்கள் விழா.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது 10 நாட்கள் விழா.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது 10 நாட்கள் விழா தொடங்கியது ஜூலை 4-ஆம் தேதி வெள்ளி சந்திரபிறை வாகன வீதிஉலா, 5-ஆம் தேதி தங்க
சூரிய பிறை வாகன வீதி உலா, 6-ஆம் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, 7-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகன
வீதிஉலா, 8-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 9- ஆம் தேதி தங்க கைலாசவாகன வீதிஉலா, 10-ஆம் தேதி தங்க பிச்சாண்டவர் நடைபெறவுள்ளன.

11-ஆம் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறவுள்ளன. 12-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமத் து நடராஜமூர்த்திக்கு மகாபி ஷேகம் நடை பெறுகிறது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிச மும்,ஞானகாச பிரவேசமும் சித்சப நடைபெறவுள்ளன. 13-ம் ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் – முத்துப்பல்லக்கு வீதிஉ லாவும், 14-ஆம் தேதி தெப்உற்சவத்துடன் முடிவடைகிறது.

விழா உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள். குழுச்செயலர் உ.வெங்கடே தீட்சிதர், துணைச் செயலா து.சுந்தர தாண்டவ தீட்சிதர் மற்றும் உற்சவ ஆச்சார்யார் கிருஷ்ணசாமி தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்