திருச்சி எம்.பி துரை வைகோவுக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு மாவட்டத் தலைவர் பைஸ் அகமது தலைமையில் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
திருச்சி எம்.பி துரை வைகோவுக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு மாவட்டத் தலைவர் பைஸ் அகமது தலைமையில் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்த இட வசதி அமைத்து கொடுத்தற்கும்,
இனாம் குளத்தூர் இரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தமைக்கும், மலைக்கோட்டை தொடர் வண்டி முதலாவது நடைமேடை வந்து நிற்பதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கும்
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பில் மேற்கு மாவட்ட தலைவர்,திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பைஸ் அகமது தலைமையில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ம.ம.க மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாநில செயற்குழு உறுப்பினர் சபீர், ஐ.பி.பி. மாநில துணை செயலாளர் முகமது ரபீக், ஐ.டி.விங் மாநில துணை செயலாளர் நஜீர், மாவட்ட துணை செயலாளர் அசாருதீன், மாவட்ட விழி அமைப்பு செயலாளர் முகமது ஜுபைர், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் பக்ருதீன், அண்ணாநகர் பகுதி தலைவர் அப்துல் நாசர், பகுதி செயலாளர் தென்னூர் சதாம், பகுதி பொருளாளர் ஜபார், தென்னூர் கிளை தலைவர் அமீர் அப்பாஸ், அப்துல்லாஹ் ஆகியோர் உடன் இருந்தனர்.