பிரபல பத்திரிக்கைகள் பெயரை சொல்லி மோசடியில் ஈடுபட்ட இளங்கோவன் என்பவர் திண்டுக்கல் மாவட்ட போலிஸாரால் கைது.
பிரபல பத்திரிக்கைகள் பெயரை சொல்லி மோசடியில் ஈடுபட்ட இளங்கோவன் என்பவர் திண்டுக்கல் மாவட்ட போலிஸாரால் கைது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிரபல பத்திரிகையின் தலைமை நிருபர் என்றும் அமைச்சர்களிடம் நேரடி தொடர்பு உள்ளது எனக் கூறிக்கொண்டு பலரை மோசடி செய்து ஏமாற்றி வந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் திண்டுக்கல் சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்,
இந்த நபர் மீது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் மோசடி புகார் பல நிலுவையில் உள்ளது என தகவல் வந்துள்ளது. இந்த இளங்கோ சில வருடங்களாக திருச்சி சமயபுரம் அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து திருச்சி பகுதியிலும் மோசடியிலும் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போதே திருச்சி போலிஸாரும் பொறிவைத்து காத்திருந்தனர். இந்த நிலையில் தான் திண்டுக்கல் போலிஸாரிடம் சிக்கியிருக்கிறான்.