அனைவருக்கும் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை.
அனைவருக்கும் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை.
கரூர் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றில் ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும் தண்ணீர் எடுப்பதற்காக காவிரி ஆற்றின் போக்கையே திசைதிருப்பி பெரிய பெரிய மணல் திட்டுகளை குறுக்கே அமைத்து கிட்டாச்சி இயந்திரங்களை பயன்படுத்தி மணல் குவியல்களை அமைத்து இதற்கு கிழக்கில் தண்ணீர் வராதவாறு செய்து வருகின்றனர்.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59.26 தான் உள்ளது. இந்த நிலையில் குடிநீருக்காக காவிரியில் 2200 கன அடி தண்ணீர் திறந்து விடுகின்றனர். இந்த தண்ணீர் கடைமடை வரை செல்லவேண்டும் ஆனால் இதுபோன்ற மணல் தடுப்புகளால் கடைசிவரை குடிநீருக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் செல்ல வாய்பில்லை. எனவே அந்தந்த மாவட்ட நிர்வாகம் சுயநலமில்லாமல் செயல்பட்டால் அனைத்து மாவட்ட மக்களுக்கும் குடிநீர் சென்றடையும் வாய்ப்பு உள்ளது. எனவே அந்தந்த மாவட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு மணல் திட்டுகளை மட்டம் செய்து அனைவருக்கும் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.