100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க, விவசாய சங்கம் கோரிக்கை.
100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க, விவசாய சங்கம் கோரிக்கை.
மதுரை, பொதும்புவில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மேற்கு ஒன்றிய குழு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், ” மேற்கு ஒன்றியத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, வீடு இல்லாதவர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் ” ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.