தீவிரமடைகிறது இறுதிகட்ட பருவமழை. மார்கழியில் ஒரு சிறு மழைக்காலம்..!

தீவிரமடைகிறது இறுதிகட்ட பருவமழை.

மார்கழியில் ஒரு சிறு மழைக்காலம்..!

இரு கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதகமாக உள்ளதால் டிசம்பரிலும் மழை இருக்கும் என்று பதிவிட்டு வந்தோம்..

அதேபோல் கடல் வெப்ப நிலை தொடர்ந்து சாதகமாக உள்ளதால் கடந்த நாட்களில் தென்கிழக்கு வங்ககடலில் உருவான மேலடுக்கு சுழற்சி இந்திய பெருங்கடலை ஒட்டி குமரிக்கடல் வழியாக மேற்கு நோக்கி நகரும்.

இதனால் இன்று முதல்(dec 15) ஏறத்தாழ dec 18 வரை தமிழகத்தில் குறிப்பாக கடலோர பகுதிகள், டெல்டா பகுதிகள், மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், நம் கொங்கு பகுதிகள் போன்ற தமிழக பகுதிகளில் மழை இருக்கும்…

இன்று கடலோர பகுதிகளில் மழை தொடங்கி படிபடியாக தமிழக மேற்கு மாவட்டங்கள் வரை பரவும்…

dec 16,17 சற்று வலுவான ஈரப்பத கிழக்கு திசை காற்று காரணமாக மேலே சொன்ன பகுதிகளில் ஆங்காங்கே மழை இருக்கும்… சமயத்தில் சற்று பரவலான மழையாகவும் இருக்கலாம். ஒருசில இடங்களில் கன மழை வரை இருக்கும்… தென் மாவட்டஙக்ள, மலையோர பகுதிகளில் ஒரிரு இடங்களில சற்று மிக கன மழை வரை இருக்கலாம் உறுதியல்ல. வட தமிழக(சென்னை மண்டலம்) பகுதிகளில் மிதமான/ சற்று கன மழை வரை இருக்கலாம்.. அதிகம் மழை இருக்காது..

நம் கொங்கு பகுதிகளில் அதிக மழை இல்லாவிட்டாலும் கொரங்காடு & மானாவாரி பயிர்கள் காய்ந்து போகாமல் இருக்கும் அளவிற்கு ஒரளவிற்க்காவது நல்ல மழை கிடைக்கும்.. ஒருசில இடங்களில் நல்ல மழையும் கிடைக்கலாம் உறுதியல்ல…

அடுத்த சுற்று மழை..

அடுத்த சிஸ்டமானது Dec 20-22க்குள் அல்லது அதிகபட்சமாக 23-25க்குள் மேற்கு நோக்கி நகர்ந்து குமரிக்கடல் வழியாக மேற்கு நோக்கி நகரவும் வாய்ப்புள்ளது.

அல்லது கடல் வெப்பநிலை சாதகம் & லேசான/ மிதமான MJO ஈரப்பதம் சாதகமாக உள்ளதால் இந்த சிஸ்டத்தை விட அடுத்த சிஸ்டம் சற்று வலுப்பெற்று இலங்கை வழியாக மன்னார் வ‌ளைகுடா வழியாக குமரியை ஒட்டி மேற்க்கு நோக்கி நகரவும் வாய்ப்புள்ளது.. அவ்வாறு நகர்ந்தால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கு பரவலாக ஒரளவிற்கு நல்ல மழை கிடைக்கும்.. அவ்வாறு நிகழ்ந்தால் தென் மாவட்டம் அதிக மழை பெற்று இயல்பு/ இயல்பைவிட சற்று அதிக மழை என்றளவில் இருக்கும்.. வரும் நாட்களில் இதை உறுதிப்படுத்தலாம்..

மேற்கு தொடர்ச்சியிலும் ஒரளவிற்கு நல்ல மழை இருக்கலாம் என்பதால் தமிழக அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது..

மழைக்காரணிகள் தொடர்ந்து பருவமழைக்கு சாதகமாக உள்ளதால் கிட்ட தட்ட டிசம்பர் இறுதிவரை அவ்வப்போது பருவ மழை இருக்கலாம் என்பதால் கொரங்காடு & மானாவாரி பயிர்கள் முற்றிலும் வறண்டு போகாமல் இருக்க வாய்ப்புள்ளது..

ஜனவ‌ரியிலும் டெல்டா & தென் மாவட்டங்களில் ஒரிரு சுற்று மழை கிடைக்கலாம்.. என்று கொங்குநாடு வெதர்மென் கணித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்