போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். ராஜேஸ்வரி பிரியா வேண்டுகோள்.
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். ராஜேஸ்வரி பிரியா வேண்டுகோள்.
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவி சாய்த்து தீர்வு காண வேண்டும்.போக்குவரத்து துறை அமைச்சர் திரு சிவசங்கர் அவர்கள் தீர்வை நோக்கி நகராமல் தள்ளிப் போட்டு தப்பித்து கொள்ள பார்ப்பதே போக்குவரத்து துறை ஊழியர்களின் ஸட்ரைக் மனநிலைக்கு காரணம்.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஸட்ரைக் செய்தால் பாதிக்கப்படப்போவது நடுத்தர மற்றும் விளிம்பு நிலை மக்கள் ஆவர்.
பொங்கல் சமயத்தில் மக்களை பயணம் செய்ய சிரமபடச் செய்து பொங்கல் செலவிற்கு வைத்திருக்கும் பணத்தினை தனியார் பேருந்து கட்டணத்திற்கு மட்டுமே செலவு செய்ய வைத்துவிடாதீர்கள்.
நிர்வாகத்திறன் இல்லாத ஆட்சியாலும்,எப்படியாவது வாக்கு வாங்க வேண்டுமென்ற ஒரே நோக்கில் கொடுக்கப்பட்ட பொய் தேர்தல் வாக்குறுதிகளாலும் அனைத்து துறையினரும் பாதிக்கபட்டு உள்ளனர்.
முதல்வர் இதனில் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும். என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி
நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.