கன மழையில் 40 வருடமாக குடி இருந்த ஓட்டு வீடு இடிந்தது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆறுதல்.
கன மழையில் 40 வருடமாக குடி இருந்த ஓட்டு வீடு இடிந்தது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆறுதல்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி 45 வது வார்டுக்கு உட்பட்ட
மேலகல்கண்டார்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயா (75 )இவரது மகன் கணேசன் (55) இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையில் சுமார் 40 வருடங்களுக்கு மேல் மண் சுவரினால் கட்டப்பட்ட அவர்கள் தங்கி இருந்த ஓட்டு வீடானது இடிந்து விழுந்தது.
இத்தகவலை அறிந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிகளுக்கு அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் இடிந்த வீட்டை பார்வையிட்டு நிவாரணத்தொகை வழங்கி அதிகாரிகளிடம் உடனடியாக அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான தேவையான பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார்.
மேலும் இந்நிகழ்வில் மாநகரச் செயலாளர் மண்டலகுழு தலைவர் மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ் மாமன்ற உறுப்பினர் சீதாலட்சுமி வட்டக் கழகச் செயலாளர் தமிழ்மணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்