கடந்த 8 ஆண்டுகளாக தொடரும் போராட்டத்துக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே தீர்வு. பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க அகில இந்திய பொதுச் செயலர் கே.ஜி. ஜெயராஜ் வலியுறுத்தல்.

கடந்த 8 ஆண்டுகளாக தொடரும் போராட்டத்துக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே தீர்வு. பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க அகில இந்திய பொதுச் செயலர் கே.ஜி. ஜெயராஜ் வலியுறுத்தல்.

கடந்த 8 ஆண்டுகளாக தொடரும் போராட்டத்துக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே தீர்வாக அமையும் என அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியர் சங்கப் பொதுச் செயலர் கே.ஜி. ஜெயராஜ் தெரிவித்தார்.

அகில இந்திய பிஎஸ்என்எல்- டிஓடி ஓய்வூதியர் சங்க 7-வது தமிழ் மாநில மாநாடு திருச்சியில் 2 நாட்கள் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாளன்று பொன்மலை சங்கத்திடலில் பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதியை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன் எடுத்துக் கொடுக்க, ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை தலைவர் பி.கிருஷ்ணன் தலைமையில் ஜோதி புறப்பட்டு மாநாடு நடைபெறும் மஹாலுக்கு வந்து சேர்ந்தது. இந்த ஜோதியை
அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.மோகன்தாஸ் பெற்றுக் கொண்டார்.

மாநாட்டு அரங்கத்தின் நுழைவு வாயிலில் தபால் தொலைத் தொடர்பு தொழிற்சங்க தலைவர் சி.எஸ்.பஞ்சாபிகேசன் நூற்றாண்டு பிறந்தநாள் வளைவு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டுக்காக, திருப்பூர் குமரன் நினைவிடத்திலிருந்து கோவை மாவட்ட செயலாளர் குடியரசு, மாவட்ட தலைவர் சௌந்தரபாண்டியன் தலைமையில் கொண்டுவரப்பட்ட தேசியக் கொடியை, புதுச்சேரி நிர்வாகி சக்திவேல் பெற்றுக்கொண்டார் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்திலிருந்து மாவட்டச் செயலாளர் மணிவண்ணன் தலைமையில்
கொண்டுவரப்பட்ட சங்கக் கொடியை சிறப்பு அழைப்பாளர் பி.ராமசாமி பெற்றுக் கொண்டார்.

மாநாட்டில் தேசியக்கொடியை மாநிலத் தலைவர் சி.கே.நரசிம்மன் ஏற்றினார். சங்கக் கொடியை ஏற்றி வைத்து அகில இந்திய பொதுச் செயலாளர் கே.ஜி. ஜெயராஜ் பேசுகையில், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தக் கோரி 2017ஆம் ஆண்டு முதல் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தை பல்வேறு வடிவங்களில் அமல்படுத்துவதிலேயே மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. ஓய்வூதியம் எவ்வளவு என்பதே தெரியாத நிலைக்கு ஆளாகியுள்ளோம். புதிய ஓய்வூதியத் திட்டத்தை மேலும் புதுப்பிக்காமல் அரசு ஊழியர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஓய்வூதியர்களின் 8 ஆண்டு கால போராட்டங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே தீர்வாக அமையும் என்றார்.

சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் பேசுகையில், ஆட்சியாளர்கள் பின்பற்றும் தவறான பொருளாதாரக் கொள்கை, சமூக மற்றும் அரசியல் கொள்கைகள்தான் மக்கள் சந்திக்கும் பிரதான பிரச்னையாக மாறி வருகிறது. நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகள், தொழிலாளர்களை மறந்துவிட்டு பெருநிறுவனங்களுக்கும் அதன் முதலாளிகளுக்கும் ஆதரவாகவே மத்திய அரசு செயல்படுகிறது. ஓய்வூதியர்களுக்கு உள்ள ஒரே பாதுகாப்பான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் பெற தொடர்ந்து போராட வேண்டும் என்றார்

பின்னர், நடந்த பொது அரங்கிற்கு மாநிலத் தலைவர் சி.கே. நரசிம்மன் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜான்போர்ஜியா வாசித்தார். வரவேற்புக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநில செயலாளர் ஆர்.ராஜசேகர் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

இன்று 2 -வது நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பேசினர். மாநிலம் முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்