சேதம் அடைந்த சாலைகளை இளைஞர்களுடன் சேர்ந்து சீர் செய்த காவல்துறையினர் பொதுமக்கள் பாராட்டு.
சேதம் அடைந்த சாலைகளை இளைஞர்களுடன் சேர்ந்து சீர் செய்த காவல்துறையினர் பொதுமக்கள் பாராட்டு.
கடந்த இரண்டு நாட்களாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதிகளில் பெய்த கன மழையால் செங்கோட்டை தஞ்சாவூர் குளம் உடைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை பாரஸ்ட் செக் போஸ்ட் அருகே சாலைகள் சேதம் அடைந்தது.
அந்த சேதம் அடைந்த சாலைகளை செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏனைய காவலர்கள் இளைஞர்களுடன் சேர்ந்து மணல் மூட்டையை சேதமடைந்த சாலையில் அடுக்கி தற்காலிகமாக சீர் செய்து போக்குவரத்து சீராக செல்லும் பணியில் ஈடுபட்டார்கள். பொதுமக்கள் பலரும் காவலர் ஆய்வாளர் மற்றும் காவலர்களின் செயல்களை பாராட்டி வருகின்றனர்.