காந்தி, காமராஜ் திருவுருவ சிலைகளுக்கு மாநகர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

காந்தி, காமராஜ் திருவுருவ சிலைகளுக்கு மாநகர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த நாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கர்மவீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு மத்திய பேருந்துநிலையம் அருகில் அமைந்துள்ள பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பாக உப்பு சத்தியாகிரக ஸ்தூபி, மலைக்கோட்டை கோட்டம் சார்பாக அருணாச்சலாமன்றம் காமராஜர் சிலை, மகாத்மா காந்தி சிலை, சத்திரம் பேருந்துநிலையம் காமராஜர் சிலை, ஸ்ரீரங்கம் கோட்டம் சார்பாக காமராஜர் மன்றத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலை மற்றும் மகாத்மா காந்தி சிலை , மார்க்கெட் கோட்டம் சார்பாக காந்தி மார்க்கெட் மகாத்மா காந்தி சிலை , ஜங்ஷன் கோட்டம் சார்பாக பீமநகர் காமராஜர் சிலை, சுப்ரமணியபுரம் கோட்டம் சார்பாக சுப்ரமணியபுரம் காமராஜர் சிலை உள்ளிட்ட அனைத்து சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் முரளி, துணைத் தலைவர் பட்டேல், பூக்கடை பன்னீர் கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல் வெங்கடேஷ் காந்தி தாராநல்லூர் முரளி, எட்வின் ராஜ், ஜெயம் கோபி, தர்மேஷ் மலர் வெங்கடேஷ் கனகராஜ், கிருஷ்ணா, மகிளா காங்கிரஸ் சீலா செல்ஸ் ஆராய்ச்சி பிரிவு பாண்டியன் மாணவர் காங்கிரஸ் நரேன், மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், ஐ டி பிரிவு லோகேஷ், அரிசிக்கடை டேவிட், அண்ணாதுரை, கிளமெண்ட், ஐ என் டி யு சி பாலு, கோகிலா, அஞ்சு, தங்கவேல் தர்மராஜ் துரைராஜ் செந்தமிழ்ச்செல்வன் பாலமுருகன் முகமது ரபீக் முகமது ஆரிப் ரங்கநாதன் பரமசிவம் மலர் அம்மா சாதனா ஜோன்ஸ் வீரமணி ரவிச்சந்திரன் சிஏ சின்னதுரை ராஜசேகரன் ஸ்ரீ பெரியநாயகம் சக்திவேல் மற்றும் காங்கிரஸ், பிச்சுமணி, பொன் தமிழரசன், ராமானுஜம், செல்வி குமரன், பூபதி, யோகநாதன், கிருஷ்ணா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்