தலித் இளைஞரை தோள் மீது தூக்கிசென்ற கோயில் அர்ச்சகர்.
தலித் இளைஞரை தோள் மீது தூக்கிசென்ற கோயில் அர்ச்சகர்.
ஐதராபாத், சில்கூர் பகுதியில் நானூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெருமாள் கோயில் ஒன்று அமைந்துள்ளது. அக்கோயிலில் அர்ச்சகராக ரங்கராஜன் என்பவர் தொண்டாற்றி வருகிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை கண்டு வருந்தினார்.
இந்த ஒடுக்குமுறைகளை அகற்ற பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என எண்ணியவர். தலித் இளைஞரான ஆதித்யா பாராஸ்ரீ என்பவரை மாலை மரியாதையுடன் தனது தோளில் உட்கார வைத்துக்கொண்டு கோயிலுக்குள் ஊர்வலமாக சென்றார் ரங்கராஜன்.
இந்துக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால்தான் அனைவருக்கும் நன்மை உண்டாகும். சனாதன இந்து தர்மத்தை புதுபிக்க இது மாதிரியான மாற்றங்கள் தேவை என அர்ச்சகர் கருத்து தெரிவித்துள்ளார்.