வர இருக்கின்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல…நம் இனத்தை, மொழியை, நாட்டை காக்கின்ற போர்.

வர இருக்கின்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல…நம் இனத்தை, மொழியை, நாட்டை காக்கின்ற போர்.

திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. கலைஞர் நகர் பகுதி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திருச்சி கல்லுக்குழி மன்னார்புரம் பகுதியில் நடைபெற்றது.வட்ட கழக செயலாளர் கணேசன் மூர்த்தி, ராஜேந்திரன்ஆகியோர் வரவேற்றனர்.

பகுதி செயலாளர் மணிவேல் தலைமை தாங்கினார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ. வேலு,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
மாநகரக் செயலாளரும்,மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன்,
கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-மொழிப்போர் தியாகிகளுக்கு இன்று வீர வணக்கம் செலுத்துகிறோம் இந்நாளில் நமது மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்திருப்பது பெருமைக்குரியது.தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் பாடுபட்ட தலைவர் கருணாநிதி.தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று தந்தார். அவரது வழியில் இன்று ஒப்பற்ற தலைவராக தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார்.மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் வேற்று மொழிகளை திணிக்க பார்க்கிறது.இதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் உரிமைகளை குறைக்க பார்க்கிறது.ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தாய்மொழிக்கு எந்த ஒரு இடரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அரணாக இருந்து வருகிறார்.மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் சபதம் ஏற்க வேண்டும் வரும் தேர்தல் பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல .நம் இனத்தை நம் மொழியை நம் நாட்டை காக்கின்ற போர். இதில் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்…
உலகம் முழுவதும் செல்லும் இந்திய பிரதமர் மோடி , திருக்குறள் பற்றி பேசி வருகிறார். அவர் இந்தியாவின் அரசு மொழியாக தமிழை ஆக்கி விடலாமே? ஏன் அதனை செய்ய ஏன் மறுக்கிறார் .
ஹிந்திக்கு தாய்ப்பாலும், பிற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பவர்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் முதல்வர் மு க ஸ்டாலின்.
தாய்மொழியாம் தமிழ் மொழியை காக்க தமிழக இளைஞர் பட்டாளம் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறது என்ற குரல் சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் காணமுடிந்தது.
500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி ஹிந்தி. 4000 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியத்தை வைத்திருந்த மொழி தமிழ்.
அத்தகைய தமிழ் மொழியை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் செல்லக்கூடிய விமானங்களில் தமிழ் ஒலிப்பதை நம்மால் காண முடிகிறது.
ஆனால் தமிழ்நாட்டிற்குள் சென்னைக்கும், மதுரைக்கும், கோவைக்கும் செல்லக்கூடிய விமானங்களில் தமிழ் மொழியை காண முடியவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் பக்தி இலக்கியங்கள் தான் முதன் முதலில் தமிழ் மொழியை பாதுகாத்து வளர்த்தது.
பின்னர் திராவிட இயக்கங்களும், அதிலும் குறிப்பாக திமுகவும் தமிழ் மொழியை பாதுகாத்து வளர்த்துள்ளது என்று பேசினார்.

முடிவில் செந்தமிழ்ச்செல்வன் பொற்கொடி இப்ராஹிம் ரம்யாபேகம் ஆகியோர் நன்றி கூறினர். பொதுக் கூட்டத்தில் நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன் ,
கே.என்.சேகரன் ,
பி.எம்.சபியுல்லா, கவிஞர் சல்மா. செந்தில் ,
துணை மேயர் திவ்யா , கோவிந்தராஜன், அ.த.செங்குட்டுவன், மூக்கன்,
லீலாவேலு, ,பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு இ.எம். தர்மராஜ், ஏ.எம்.ஜி விஜயகுமார், ஆர். ஜி.பாபு மற்றும் குணசேகரன் நூர்கான் சந்திரமோகன் பொன் செல்லையா சரோஜினி வெங்கட்ராஜ் தமிழ்ச்செல்வன்,மற்றும் இளைஞர் அணி வெங்கடேஷ் குமார், ஏ.பி.ரகுநாதன்,ஜோயல், சௌகத் அலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்