ரத்த களரியில் துவங்கிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா.
ரத்த களரியில் துவங்கிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா.தி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாதேசி திருவிழாவானது இன்று திருநெடும் தாண்டகம் என்னும் உற்சவத்தின் மூலம் துவங்கியது. இந்த துவக்க நாளான இன்று காலையில் அரங்கனை தரிசிக்க கர்நாடக-ஆந்திர ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
அப்படி தரிசினம் செய்ய வந்த ஐய்யப்ப பக்தர் ஒருவர் கோவில் உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு காணிக்கை விழாததால் காணிக்கை உண்டியலை தட்டியிருக்கிறார். இதை கோவில் ஊழியர் ஒருவர் தட்டி கேட்க, இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்ப்பட்டு, இதில் கோவில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மூவர் கர்நாடக ஐய்யப்ப பக்தரான சென்னாராவ் என்பவரை அடித்ததில் அவர் ரத்தம் சொட்ட, சொட்ட கீழே விழுந்திருக்கிறர். மேலும் இரு ஐய்யப்ப பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர். இதில் கோவில் ஊழியர் ஒருவருக்கும் அடி விழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் கர்நாடக ஐய்யப்ப பக்தர்கள் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர். கோவில் ஊழியர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளனர். நிலவரம் கலவரமானதால் போலிசார் வந்து இருதரப்பினரையும் விலக்கிவிட்டனர்.
சென்னா ராவ் கோவில் ஊழியர்களான, செல்வம், விக்னேஷ், பரத், ஆகியோர் தங்களை தாக்கியதாக போலிஸில் புகார் மனு அளித்திருக்கிறார்கள். அடிபட்ட ஐயப்ப பக்தர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக தெரிகிறது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அரங்கனை மூலஸ்தானத்தில் தரிசிக்கும் ஏற்பாட்டில் உள்ள குளறுபடிகளை உடனடியாக நிவர்த்தி செய்து அங்கு அரங்கனை மனம் குளிர்ந்து தரிசித்து செல்லும்படி ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும் இந்து சமய அறநிலையத்துறை, கோவிலில் ரவுடி ஊழியர்களை பணியில் வைக்காமல், தரமான ஆட்களை பணியில் அமர்த்த வேண்டும் என ஸ்ரீரங்கம் மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடக ஐயப்பபக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், கோயில் நிர்வாகத்தை கண்டித்தும் கம்யூனிஸ்ட், மற்றும் இந்து முன்னணி,பாரதிய ஜனதா கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீரங்கத்தில் போலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.