பின்புலம் இல்லை. ஆனால் லட்சக்கணக்கில் உதவி. கலக்கும் நடிகர் பாலா.
பின்புலம் இல்லை. ஆனால் லட்சக்கணக்கில் உதவி. கலக்கும் நடிகர் பாலா.
கஷ்டப்பட்டு முன்னேறி எந்தவித பின்புலமும் இல்லாமல் நடித்து வளர்ந்து வரும் நடிகர் தான் பாலா.
கொஞ்சம் கொஞ்சமாக நடித்ததில் தான் சேமித்த பணத்தை வைத்து நலிந்த நடிகர்களுக்கும் உதவி வருகிறார். கடந்த ஜூலை மாதம் அறந்தாங்கி நமது இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். இதன் பிறகு ஆகஸ்ட் மாதம் மலைக்கிராமத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் பாம்பு கடித்து மனிதர்கள் மரணத்தை தழுவ, மலைவாழ் மக்களுக்காகவே ஒரு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். அப்போது தான் பாலாவை நாடே அறிந்து அதிகம் பேசும் பொருளானார்.
இதைத் தொடர்ந்து சோளக்களை கிராமத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை செப்டம்பர் மாதம் வாங்கிக் கொடுத்துள்ளார். அது போல் அக்டோபர் மாதம் சென்னை கோயம்பேட்டில் உள்ள உணர்வுகள் அறக்கட்டளைக்கு ஒரு ஆம்புலன்ஸ் பாலா வழங்கினார். இது அவர் வழங்கிய 4 ஆவது ஆம்புலன்ஸ் ஆகும். அது போல் 125 விவசாயிகளுக்கு மண் வெட்டி, கடப்பாறை, விவசாய உபகரணங்களையும் பாலா வழங்கியுள்ளார்.
இந்த ஆம்புலன்ஸ்களை எல்லாம் அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிக் கொடுத்தார். இதற்காக யாரிடமும் பணம் கேட்கவில்லை. இப்படிப்பட்ட பாலாவிடம் சொந்தமாக கார் கூட கிடையாது. ஆனால் இன்னும்.. இன்னும் பல ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுப்பேன். என்ற பாலாவின் மனசு போல தமிழ்த்திரை உலகத்தில் பல நடிகர்களுக்கும் இல்லை என்பது தான் ஆச்சர்யம்.
அதேபோல் முதியோர் இல்லத்திற்கு உதவி, ஆதரவற்ற 20 குழந்தைகளுக்கு படிப்பு செலவு என பல உதவிகளை செய்து அசத்தி வரும் நடிகர் பாலாவின் சேவயை கண்டு, நடிகர் லாரன்ஸ் கூட ஒரு நிகழ்ச்சியில் பாலாவின் சேவையை பாரட்டியதோடு, அவருக்கு 10 லட்சம் ரூபாய் பணத்தை மேலும் சேவை செய்ய அன்பளிப்பாய் கொடுத்தார். இன்னும் வேண்டுமானால் எப்பொழுது வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார்.
இந்த நிலையில் தான் சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிபோட, பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு நடிகர் பாலா நிதி உதவி செய்துள்ளார்.
என்னதான் உணவு, குடிநீர், பால், உணவு என்று பல உதவிகள் செய்தாலும் அன்றாடம் வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் செலவு செய்யும் மக்கள் தான் அதிகமாக உள்ளனர். சில தேவைகள் பணத்தால் தான் சரி செய்ய முடியும்.
கஷ்டப்பட்டவனுக்குத்தான் ஏழைகளின் வலி தெரியும் என்பதால், அவர்களுக்கு உதவும் வகையில் நடிகர் பாலா புயலால் பாதிக்கப்பட்ட , அனக்காபுதூர், பம்மல், பல்லாவரம் பகுதி மக்கள் சுமார் 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம் இரண்டு லட்சம் ரூபாயை நேரிடையாகவே சென்று நிதி உதவி செய்துள்ளார். அடுத்ததாக பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூபாய் 3 லட்சம் செலவில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். அதாவது, பள்ளிக்கரணையில் உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், துரைப்பாக்கம் பல்லவன் நகரில் உள்ள மக்களுக்கு ஆடை மற்றும் உதவித்தொகையை வழங்கி உள்ளார்.
பெரிய பெரிய பிரபலங்களே செய்ய தவறிய உதவியை வளர்ந்து வரும் நடிகர்கள் செய்வது மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
பணம் சம்பாதித்து வைத்தால் என்ன ஊசியா போக போகிறது என நிறைய பேர் ஓடி ஓடி சம்பாதிக்கிறார்கள். சிலர் நியாயமாகவும் சிலர் அநியாயமாகவும் சம்பாதிக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் பாலா வித்தியாசமாய் தெரிகிறார்.
வாழ்த்துகள் பாலா…