இனி ‘புள்ளிங்கோ’ கட்டிங் கிடையாது . ராமநாதபுரம் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் முடிவு.
இனி ‘புள்ளிங்கோ’ கட்டிங் கிடையாது .
ராமநாதபுரம் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் முடிவு.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒன்சைடு, பாக்ஸ்கட்டிங், கோடு வரைதல் ஆகிய புள்ளிங்கோ கட்டிங் செய்வதுஇல்லை என முடி திருத்தும் தொழிலாளர் நலசங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மருத்துவர் சமூக முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் மாவட்ட தலைவர் முத்துமாரி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சேகர் ஆகியோர் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள்ஜூன் 10ல் திறக்கப்பட உள்ளது. மாணவர்கள் சிகைஅலங்காரம் செய்வதற்கு சலுான் கடைகளுக்கு வரும் போது சமூக பொறுப்புடன் தொழிலாளர்கள் நடந்து கொள்ளவேண்டும்.
எனவே மாணவர்கள் வலியுறுத்தினாலும் ஒன்சைடு, பாக்ஸ் கட்டிங், கோடு வரைதல் ஆகிய புள்ளிங்கோகட்டிங் செய்ய முடியாது என மறுத்துவிட வேண்டும். இதனைஅனைத்து சலுான் கடை தொழிலாளர்களும் பின்பற்ற வேண்டும் என்றனர்.