15 நாட்களாக தண்ணீர் வரவில்லை. தாராபுரம் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.
- 15 நாட்களாக தண்ணீர் வரவில்லை. தாராபுரம் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிக்குட்பட்ட உடுமலை சாலை, மாருதி நகர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குடிநீர் சீராக வழங்க கோரி கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு காலிகுடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்களுக்கு தண்ணீர் வந்து 15 நாட்களுக்கு மேலாகிறது. இன்னும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.
தாராபுரம் சின்னக்காம்பாளையத்தில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு உள்ளது. எனவே கோழிப்பண்ணை இயங்க தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி சின்னக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.